பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு இம்போட்மிரர் ஊடகவலயமைப்பின் இரங்கல்

னது இளம் வயதிலேயே இசைத்துறையில் அடியெடுத்து வைத்த பாலசுப்பிரமணியன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் கூடுதலான பாடல்களை பாடியவர். இசையமைப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர் என பல அவதாரங்களை எடுத்தவர். தமது தேன் கலந்த குரலால் திரைப்பட பாடல்களுக்கு கூடுதல் இனிமையும், சுவையும் சேர்த்தவர். இசை உலகில் அவர் படைத்த சாதனைகளை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எவராலும் முறியடிக்க முடியாது.

திரையுலகில் 54 ஆண்டுகளாக தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த பாலசுப்பிரமணியன் எண்ணிடலங்காத விருதுகளை வென்றவர். சாதனைகளின் உச்சங்களைத் தொட்டவர் என்றாலும் கூட, எளிமையை தனது அடையாளமாக்கி கொண்டவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனாவிலிருந்து மீண்டு விட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் தேறி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். 

ஆனால், அவர் வரவில்லை; அவரது மறைவு செய்தி மட்டும்தான் வந்திருக்கிறது. உண்மையாகவே எஸ்.பி. பால சுப்பிரமணியத்தின் மறைவு அனைத்து மொழி திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு தான். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருப்பார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் இம்போட்மிரர் ஊடக வலயமைப்பு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :