ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநர் பதுளை மாவட்டத்தில் உள்ள மதஸ்தானங்களுக்குச் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்



க.கிஷாந்தன்-
வா மாகாணத்தின் புதிய ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், பதுளை மாவட்டத்தில் உள்ள மதஸ்தானங்களுக்குச் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
அந்த வகையில் பதுளை முதியங்கான ரஜமகா விகாரைக்கு சென்ற ஆளுநர் முஸம்மில் விகாரைக்கு பொறுப்பான மலகல சந்திம தேரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் ரிதீபான ஸ்ரீ பேச்சியம்மன் கோவிலுக்குச் சென்று ஆர்.சி. சாமி குருக்களை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பதுளை ஷாந்த மரியா தேவாலயத்துக்குச் சென்று, தேவாலயத்துக்கு பொறுப்பான அருட்தந்தை பிரியந்த அவர்களை சந்தித்தார்.
இறுதியாக பதுளை பிரதான ஜூம்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் கௌரவ ஆளுநரை வரவேற்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :