'அறிஞர் அண்ணாவின் கல்விக் களம்' என்ற தலைப்பில் உரையாற்றிய குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, பேரறிஞர் அண்ணா அவர்களின் கல்விக் களம் குறித்த தகவல்களுடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் வலியுறுத்தினார்.
1. திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் அமைந்துள்ளதால் அதனை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும்.
2. தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தினை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
3. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் 80.33% ஆகும். இவ்வீதம் தேசிய சராசரியை விட அதிகமானது. இந்நிலையில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
4. தொலைநோக்குப் பார்வையோடு அண்ணாவால் முன்வைக்கப்பட்ட 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற முழக்கம் வலுப்பெற வழி செய்யப்பட வேண்டும்.
5. மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதை கைவிட வேண்டும்.
6. அயல்நாடுகளில் இருக்கும் இந்தியப் பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
0 comments :
Post a Comment