ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளருமான எம்.ஐ.எம். மன்சூர் ஏற்பாடு செய்திருந்த தலைவர் ஞாபகார்த்த நிகழ்வும் விசேட துஆப் பிரார்த்தனை வைபவமும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (18) சுபஹ் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுக்காக குர்ஆன் தமாம் வைபவம் இடம்பெற்றதுடன், அவரின் மறுமை ஈடேற்றத்துக்கான துஆப் பிரார்த்தனையை சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியில் அதிபர் மௌலவி எஸ். இஸ்மா லெப்பையினால் துஆப் பிரார்த்தனை நிகழ்தியதுடன், ஞாபகார்த்த உரையினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment