20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனைக்கு எதிராக கபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்றப் பணிப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண ஆளுநருமான கீர்த்தி தென்னகோன் இன்று வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
5 மனுக்கள் இன்றைய தினத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
நாடாளுன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடை முறையில் உள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால், அதனை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொது மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி நேற்று மாலை வரை 6 தரப்புக்கள் உயர் நீதிமன்றில் விஷேட மனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சட்டத்தரணி இந்திக கால்லகே, அனில் காரியவசம், இலங்கை வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் நேற்றைய தினம் இம்மனுக்களை தாக்கல் செய்தனர்.
நாடாளுமன்ற பெரும்பான்மையை மாத்திரம் கொள்ளாமல் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு இந்த திருத்த யோசனைக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்ற உத்தரவை வழங்கும்படி மனுதாரர் தனது மனுவில் கோரியிருக்கின்றார்.
சட்டமா அதிபர் இந்த மனுவில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment