கல்முனை மாநகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..

அஸ்லம் எஸ்.மௌலானா-


ல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பன இணைந்து கல்முனை மாநகரப் பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இதனை இன்று வியாழக்கிழமை மாலை, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஆரம்பித்து வைத்தார்.

கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி ஆகியோரின் நெறிப்படுத்தலில் இன்று மாலை இடம்பெற்ற புகை விசிறும் நடவடிக்கைகளை மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம்.பாறூக், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான நியாஸ் எம்.அப்பாஸ், ஜே.எம்.ஜமால்தீன், எம்.ஐ.இத்ரீஸ், எஸ்.தஸ்தகீர், எஸ்.இளங்குமரன், ஆகியோர் கண்காணித்து வழிநடாத்தினர்.

இதன்போது கல்முனை மாநகர பஸார், அரச அலுவலகங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் இராணுவ முகாம் உள்ளிட்ட பல இடங்களில் டெங்கு நுளம்பு அழிப்புக்கான புகை விசிறப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :