15 ஆண்டுகாலமாக மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுவந்த உலக தரிசனம் (வேள்ட் விஷன்) சேவைநிறைவு நிகழ்வு

ஏறாவூர் எம்ஜிஏ நாஸர்-

டந்தகால போர்ச்சூழல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகாலமாக மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுவந்த உலக தரிசனம் (வேள்ட் விஷன்) நிறுவனத்தின் சேவைநிறைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.

கல்குடாவிலுள்ள உல்லாச விடுதியொன்றில் கிரான் அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் திருமதி ஹிந்து றோஹாஸ் குமாரஸ்சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகான்த் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சிறுவர்களது அபிவிருத்தியை மையமாகக்கொண்டு பல்வேறு பங்காளர்களுடன் செயற்பட்ட இந்த நிறுவனத்தின் பணிகள் மூலமாக சுமார் ஐயாயிரம் சிறுவர்களும் எட்டாயிரம் பொதுமக்களும் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தகால போர்ச்சூழல் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், குடும்ப வாழ்வாதாரம் மற்றும் சமாதானம் போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக இந்நிறுவனம் பணியாற்றியுள்ளது.

சுமார் 19 ஆயிரம் சனத்தொகையினைக்கொண்ட கிரான் பிரதேசத்திலுள்ள 9 கிராமங்களில் வேள்ட் விஷன் நிறுவனம் பணியாற்றியுள்ளது.

பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, பிரதேச சபைத் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா மற்றும் பணிப்பாளர்களான க்ளரன்ஸ் சுதர்ஷன், சிரோன் பெரேரா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பிராந்திய நிறுவனத்தின் பணிகளைப்பாராட்டினர். மாணவர்களது கலைநிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.
அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :