இன்று விபுலாநந்த சமாதி அருமம்பொருட்காட்சியமாக்க அடிக்கல்நடுவிழா


காரைதீவு நிருபர் சகா-

.கி.மிசன் மட்டு. கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தை அரும்பொருட் காட்சியகமாக மாற்றியமைப்பதற்கு இராமகிருஷ்ண மிஷனால் தீர்மானிக்கப்பட்டதற்கமைய அதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) காலை இடம்பெற்றது.

பூஜை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி இ உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி ஆகியோரின் தலைமையில் அடிக்கல் நட்டுவைக்கப்பட்டது.

இதற்கு மட்டுமாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் அங்குள்ள மிசன் அபிமானிகளஒ; மற்றும் காரைதீவிலிருந்து சென்ற மிசன் அபிமானிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.அடிக்கல்நடுவிழா நிறைவடைந்ததும் சுவாமிஜகளின் சமாதிக்கு மலரஞ்சலி நிகழ்த்தப்பட்டது.அங்கு ஊடகங்களுக்கு சுவாமிகள் கருத்துரைத்தனர்.

அதனைத்தொடர்ந்து சுவாமி விபுலாநந்த மணி மண்டபத்தில் சிறுகூட்டமொன்று நடாத்தப்பட்டது. அதில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜி இ உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மட்டு.விபுலாநந்த நூண்றாண்டுவிழாச்சபைத்தலைவர் க.பாஸ்கரன் காரைதீவு சுவாமி விபுலாநந்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் உரையாற்றினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :