உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையைக் குறைக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதற்கான மாற்று நடவடிக்கை குறித்தும் அரசாங்கம் விரைவில் தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சிறிய ரக பொலித்தீன் பெக்கட்டுகளை தடை செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முதலாவது கட்டமாக, உணவுப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை சிறிய ரக பொலித்தீன் பெக்கட்டுகளின் மூலம் விற்பனை செய்வது இடைநிறுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சிறிய மதுபான போத்தல்களை தடை செய்வது குறித்த நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்
0 comments :
Post a Comment