நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை ; விசாரணை குழுவில் அமீரலி, பைலா, ஜவாத் நியமனம்.




நூருல் ஹுதா உமர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் அண்மையில் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்காக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் அதிகார பீடம் நேற்று முன்தினம் கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்கட்சியின் தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, பொருளாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.அப்துல் ரஸாக் (ஜவாத்) ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய, அண்மையில் ஏ.எம்.எம்.நௌஷாட் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையை, கட்சியின் அதிகார பீடம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :