திருகோணமலை ரோட்டரி கழகம், திருகோணமலையில் உள்ள பல பாடசாலைகளுக்கு அந்தந்த இன்ட்ராக்ட் கிளப்புகள் மூலம் கைகள் கழுவும் அலகுகளை, வழங்கி மாணவ மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த திட்டத்தை கண்டி ரோட்டரி கழகம் மற்றும் கொழும்பு Reconnections. ரோட்டரி கழகம் அனுசரணை வழங்கியுள்ளது .
இந்த கைகள் கழுவும் அலகுகள் நன்கொடை "கோவிட -19 பரவலை நிறுத்தும்" திட்டத்தின் ஒரு பகுதியாகும்,
இலங்கை ரோட்டரி மாவட்டம் 3220, சுகாதார அமைச்சுக்கு தானியங்கி பி.சி.ஆர் சோதனை உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதன் மூலம் பல நடவடிக்கைகளை செய்து வருகிறது.
இந்த திட்டதுக்கு ஆரம்ப கட்டமாக 12 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது .
0 comments :
Post a Comment