புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர், சபை முதல்வர் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிகளுக்கு மஹிந்தா யாப்பா அபேவர்தன. தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பதவிகள் தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 9.30 அளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அன்றைய தினம் சபாநாயகர் ,பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment