தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரனுக்கு இன்று (15.08.2020) சனிக்கிழமை கல்குடா தொகுதியில் பல இடங்களில் பொது மக்களால் வரவேற்பு வழங்கப்பட்டது.
கல்குடாத் தொகுதியின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குலம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனையிலும் பொது மக்களால் வரவேற்பு வழங்கப்பட்டது.
இதன் போது இராஜாங்க அமைச்சருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் பொண்ணாடை போர்த்தப்பட்டதுடன் ஏற்பாட்டாளர்களால் கலந்து கொண்டவர்களுக்கு தாகசாந்தியும் வழங்கப்பட்டது.
இதன் போது இராஜாங்க அமைச்சருடன் ஆதரவாளர்கள் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment