றாசிக் நபாயிஸ்-
இலங்கையில் கிழக்கு மற்றும் தென் மாகாண மாற்றுத்திறனாளிகளின் சமூக சேவைகளை அணுகும் மற்றும் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி இலக்கை அடைதல் திட்டங்களின் ஒரு கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை, கல்முனை வடக்கு சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச விஷேட கல்வி ஆசிரியர்கள் மற்றும் பிரதேச மட்ட சுய உதவிக் குழு உறுப்பினருக்கான சைகை மொழி பயிற்சி நெறி நேற்று (2020/08/28) கல்முனை பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் அம்பாறை மாவட்ட நவஜீவன் அமைப்பின் இணைப்பாளர் ரி.டி.பத்ம கைலநாதன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக நவஜீவன அமைப்பின் திட்ட இணைப்பாளர் கே.டி. முதிர்ந்த, கல்வி இணைப்பாளர் எம்.ஏ
ஏ.மியாமி, சமுதாய சார் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் டபிள்யூ.ஏ.கிருஷாந்தி போன்றோர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வின் பிரதான வளவாளர்களாக மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தின் சைகை மொழி ஆசிரியர்களான துஷாரா மற்றும் செல்வ மலர் போன்றோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.
மாற்றுத்திறனாளிகளில் வாய்பச முடியாத பிள்ளைகள் இன்று
சமூகத்தில் முன்னுக்கு வந்து பல விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் சமூகத்திலிருந்து அவருடைய உரிமைகளைப் பெற அவர்களுக்கு இந்த சைகை மொழியில் பெரிதும் உதவியாக இருக்கும்.
சமூகத்திலிருந்து அவர்களுடைய உரிமைகளை மாற்றுத்திறனாளிகள் பெற அவர்களுக்கான இந்த சைகை மொழியை ஒவ்வொரு அரச உத்தியோகத்தர்களும்
கற்றுக் கொள்வது கட்டாயம் என
இந்நிகழ்வின் பிரதான
வளவாளர் துஷாறா வேண்டிக் கொண்டார்.
0 comments :
Post a Comment