எச்.எம்.எம்.பர்ஸான்-
மட்டக்களப்பு மாவட்டம் - ஓட்டமாவடியைச் சேர்ந்த எஸ்.எம். சனூஸ் நளீமி இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் சட்டத்தரணியாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் (28) வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர், தரம் ஒன்று முதல் க.பொ.த.சாதாரண தரம் வரை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்றுள்ளதோடு, சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் நேர்முகத் தேர்வில் சித்தி பெற்று அங்கு உயர்தரக் கல்வியைத் தொடர்ந்தார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் 3A சித்திபெற்றதோடு, அதனைத் தொடர்ந்து இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் சட்டமாணி கற்கை நெறியின் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அக்கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்தார்.
இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதியாண்டு தேர்வில் தோற்றி சித்தியடைந்து உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட இவர், எஸ்.ரீ.சஹாப்தீன், எஸ்.ஐ. சுபைதா தம்பதிகளின் புதல்வராவார்.
0 comments :
Post a Comment