பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அடுத்த வாரம் முதல் அப்பணியில் இருந்து விலக்கிக்கொள்ளவுள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி 81 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரில் சிலர் தற்சமயம்கூட பொலிஸ் அப்பணியில் இருந்து விலகியுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.
0 comments :
Post a Comment