சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 120 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை, மீள நாட்டுக்கு அழைத்துவரும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கட்டாரின் தோஹா விமான நிலையத்தில் இருந்து 13 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் இலக்க விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 1.45க்கு இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், பிரித்தானியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 107 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 எனும் இலக்க விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 5.25க்கு இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment