ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைச்சுப் பொறுப்புக்களை கோரிவருவதால் பாரிய சங்கடத்திற்கு பிரதமர் தள்ளிவிடப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாகவும், அவரது குடும்ப உறுப்பினர்களை அணுகியும் இவ்வாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
அமைச்சுப் பதவிகளை கேட்டு தன்னிடம் வர வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இதனாலேயே பிரதமரை குறித்த உறுப்பினர்கள் நாடியுள்ளனர்.
எவ்வாறாயினும் நாளை மறுநாள் புதன்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment