நுவரெலியா மாவட்டத்தில் 08 பேரை தெரிவு செய்ய 5 லட்சத்து 77 ஆயிரத்து 715 பேர் 498 நிலையங்களில் வாக்களிப்பு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
நுவரெலியா மாவட்டத்தில் எட்டு பேரை தெரிவு செய்வதற்காக 05 லட்சத்து 77 ஆயிரத்து 715 பேர் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 498 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
குறித்த வாக்கெடுப்பு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சகல வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (05) திகதி காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகின.
வாக்காளர்கள் சீரற்ற காலநிலையினையும் பொறுப்படுத்தாது வாக்களிப்பில் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவதனை காணக்கூடியதாக இருந்தன.
நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை பொதுத்தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும் 13 சுயேட்சைக்குழுக்களையும் சேர்ந்த சுமார் 275 போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வாக்களிப்பு பணிகளுக்காக 4 ஆயிரம் அரச உத்தியோகஸத்தர்களும் வாக்கெண்ணும் பணிகளுக்காக 2 ஆயிரம் அரச உத்தியோகஸ்த்தர்களும்,பாதுகாப்பு பணிகளுக்காக 1500 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாக்களிப்பு மாலை 5.00 மணிக்கு நிறைவு பெற்ற பின் நுவரெலியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 95 வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்கெண்ணும் பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் ஆறாம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்.அதனை தொடர்ந்து பகல் ஒரு மணியளவில் தேர்தல் முடிவுகளையும் இரவு ஏழு மணியளவில் விருப்பு வாக்கு முடிவுகளையும். வெளியிடக்கூடியதாக இருக்கும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்தார்.
வாக்கெடுப்புக்கள் சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் எந்த ஒரு வாக்கெடுப்பு நிலையத்திலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அசாம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட வில்லை. என பாது காப்பு அதிகதாரிகள் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :