விக்னேஸ்வரனிடம் CID 2 மணிநேர விசாரணை..!

ஜே.எப்.காமிலா பேகம்-

டமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை 2 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்துக்கு இன்று காலை திடீரெனச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தலைமையிலான சி.ஐ.டி. குழுவினரே இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் முதலமைச்சரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தொடர்பாகவே இவர்கள் விசாரணையை அமைந்திருந்தது.

கேள்வி – பதில் வடிவில் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட அறிக்கை சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது.

இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அந்த அமைந்திருப்பதாகவும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்கினேஸ்வரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையானவையா இல்லையா என்பதை உறுதிப்படுத்துமாறு விசாரணைக்காக வந்திருந்தனர்.

பொலிஸ் அதிகாரிக்கு உயர் மட்டம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விக்கினேஸ்வரனிடம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி கேள்வி எழுப்பினார்.

உடனடியாகவே இது தொடர்பான ஆவணத்தை கையளித்த விக்கினேஸ்வரன், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விக்கினேஸ்வரன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலிடத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி,
தேவை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -