இலங்கையில் இனி வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய பிறப்புச் சான்றிழ் என்றே தலைப்பிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் என்.சி வித்தானகே இதனைத் தெரிவித்தார்.புதிய பிறப்புச் சான்றிதழிலிருந்து 'இனம்' என்ற பகுதி நீக்கப்படவில்லை
எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள உத்தேச பிறப்புச் சான்றிதழிலிருந்து 'இனம்' என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது என சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் செய்தி உண்மையின் தவறான விளக்கமாகும்.
திருத்தப்பட்ட 'தேசிய பிறப்புச் சான்றிதழ்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, பதிவாளர் நாயகம் திரு. என்.சி.விதானகே தெரிவிக்கையில், 'இனம்' தவிர்த்து பெற்றோரின் 'தேசியமும்' இதில் உள்ளடங்கும் என்றார். இருப்பினும், பதிவாளர் நாயகம் வழங்கிய மாதிரியில், பெற்றோரின் 'இனம்' என்பதற்கு பதிலாக 'இனத்துவம்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 'தேசியம்' என்ற புதிய பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சில குழந்தைகளுக்கான 'பெற்றோர் திருமணமானவர்களா' என்ற பிரிவு புதிய பிறப்புச் சான்றிதழிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் பழைய பிறப்புச் சான்றிதழில் கூட மத விவரங்கள் குறிப்பிடப்படாத நிலையில் முன்மொழியப்பட்ட சான்றிதழிலும் அவை சேர்க்கப்படவில்லை என்றும் பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
மேலும் தேசிய இனம் என்கிற விடயமும் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல பிள்ளையின் பிறப்பின்போது அடையாள இலக்கம் ஒன்று வழங்கப்படும்.
மிகவும் பாதுகாப்பான மற்றும் கனமான கடதாசியினால் இந்த சான்றிதழ் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் அடையாளம் காணமுடியுமான வகையில் கூகுள் தேடல்பொறியும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹோலோகிராம் ஸ்டிக்கரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பதிவாளரது கையெழுத்து பொறிக்கப்பட்டே இனி வழங்கப்படும்.