வெலிமடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் ஆளும் யுகம் ஒன்றை உருவாக்குவதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரணிலும் மைத்திரிபாலவும் முரண்பட்டனர். இதனால் கடந்த 5 வருடங்களில் மக்களுக்கென செயற்திறன் மிக்க பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு வளங்களை விற்பதற்கான தேவையே காணப்பட்டது. சர்வதேசத்துடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டது. நாட்டிற்கு பொருத்தமற்ற ஒப்பந்தங்களில் இருந்து விலக திட்டமிட்டாலும் அது இலகுவான காரியமல்ல. இதனால் சர்வதேசத்தை பகைத்துக்கொள்ளக்கூடிய நிலை உருவாகும்.
தமது அரசாங்கத்தில் விவசாயிகள் வாழ்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். |