திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 42 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 42 ஆவது தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் அவர்கள் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் 26.07.2020 - ஞாயிற்று கிழமை அன்று இடம் பெற்றது.

இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் ஆ. உதயராஜன் , கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார்.

செயலாளர் அரு கிருபாகரன் 2019-2020 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு வே. மகேந்திரராஜா- சிரேஷ்ட பணிப்பாளர் - நிதியியல் ஆணைக்குழு கலந்து கொண்டார். இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் ஆ. உதயராஜன் புதிதாக தெரிவான தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்துக்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.. புதிய அங்கத்தவர்களாக திரு க பிரபாகரன் - பிராந்திய முகாமையாளர் மத்திய வங்கி கிழக்கு மாகாணம் மற்றும் திருமதி குமுதினி ஜெய ஜோகரட்ணம் - உதவி பொது முகாமையாளர் , இலங்கை வங்கி , கிழக்கு மாகாணம் அவர்களும் இணைத்துக் கொள்ளப்படார்கள்.

இவ் வைபவத்தில்ஊடகவியலாளர் திரு சசிகுமார் அவர்களும் கௌரவிக்கப் பட்டார்.

பிரதம விருந்தினர் திரு வே. மகேந்திரராஜா அவரது உரையில் றோட்டரிக் கழகம் இன்னலுற்ற மக்கள் மத்தியில் சிறந்த சேவை புரிவதாக பாராட்டினார். இலங்கை நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை குறிப்பிட்டு, கிழக்கு மாகாணத்தின் நிலை மிகவும் கவலை தரக் கூடிய நிலையில் இருப்பதை மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். அத்துடன் “சமச்சீர் வளர்ச்சி 2030 நிகழ்ச்சி நிரலுடன் இணைவது - Balanced Development align with agenda 2030” பற்றி எடுத்துக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -