இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி அவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தாங்கள் இணக்கத்தைத் தெரிவித்திருந்தீர்கள்.
அந்தவகையில் - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நிபுணர்கள் விரைவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி அறிவித்திருப்பது
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் பெரும் கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நின்ற போது ஜனாதிபதி கோட்டாவை ஆதரிக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இணைந்து கொண்ட முதலாவது முஸ்லிம் கட்சி எமது உலமா கட்சி என்ற வகையில் இந்த அனுமதிக்காக மிகவும் சந்தோஷப்படுகின்றோம்.
ஜனாதிபதி கோட்டாவின் அரசாங்கம் இனவாதமாக செயற்படுகிறது என்ற சில முஸ்லிம் கட்சிகளின் பிரச்சாரம் இதன் மூலம் பொய்யாகியுள்ளது.
அத்துடன் இது விடயத்தை அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் நாம் நன்றி சொல்வதுடன் இதன் மூலம் எதிர் வரும் ஜனாதிபதி கோட்டாபயவின் அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம்களும் இருப்பது அவசியம் என்பதையும் தமிழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ், முஸ்லிம் கட்சிகளை இந்த தேர்தலில் பலப்படுத்த சிறுபான்மை மக்கள் முன் வர வேண்டும் என்றும் உலமா கட்சி தெரிவித்துக்கொள்கிறது.