திருகோணமலை உட்துறைமுக வீதிப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளால் பாதுகாப்பின்றி கொட்டப்படும் குப்பை கூழங்கள் மற்றும் பொலித்தீன் பைகளை சாப்பிட்டு அசுத்தப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் விசனம் .


எப்.முபாரக்-
திருகோணமலை உட்துறைமுக வீதிப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளால் பாதுகாப்பின்றி கொட்டப்படும் குப்பை கூழங்கள் மற்றும் பொலித்தீன் பைகளை சாப்பிட்டு அசுத்தப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாண சபைக்கு முன்பாகவுள்ள சவுக்கு மரக்கூடலில் குப்பை கூழங்கள் இடும் கழிவு பக்கட்டினை கட்டாக்காலி மாடுகள் தள்ளி விட்டு தினமும் சாப்பிட்டு வருவதாகவும் சில வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் குரங்குகள் இழுத்துச் சென்று கழிவுகளை நடு வீதியில் இடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதனால் நீண்ட நாட்களாக உக்கி கிடக்கும் கழிவுகளினால் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மாகாண சபைக்கு முன்பாகவுள்ள பகுதிகள் பாதுகாப்புகள் உள்ள போதும் அப்பகுதிகளில் அரச திணைக்களங்கள் காணப்படுகின்ற போதிலும் குப்பை கூழங்களுக்கான சிறந்த வழிவகைகளை உரிய அதிகாரிகள் கவனமெடுத்து மேற்கொள்ளாதது ஏன் எனவும் அப்பகுதி மக்கள் கேட்கின்றனர்.
எனவே கட்டாக்காலி மாடு உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு சிறந்த தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -