இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பிற்போடப்பட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பொலன்னறுவை இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் தபால் மூல வாக்களிப்பு நடாத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
அத்துடன், அதற்கான மாற்று திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே, இராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தபால் மூல வாக்களிப்பை, இன்று நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment