எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இயங்கி வரும் மீரா விளையாட்டுக் கழக அங்குரார்ப்பண நிகழ்வும், கழக சீருடை அறிமுகமும் மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் (9) ம் திகதி கழகத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கழகத்தின் நோக்கத்தையும் இலக்கையும் அறிமுகம் செய்த கழகத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் உரையாற்றுகையில்,
இவ் நவீன காலத்தில் கையடக்கத் தொலைபேசிக்கும் இணையப் பாவனைக்கும் இளைஞர்கள் அடிமைப்பட்டுள்ளதோடு, அவர்களின் ஆரோக்கியம் விடயத்திலும் அவர்கள் கவனஞ் செலுத்தாமல் காணப்படுகின்றனர். அதனைக் கருத்திற் கொண்டு இவ் இளைஞர் சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பை செய்ய வேண்டும் எனும் நோக்கில் இக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு, ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உறுப்பினர்களான ஏ.எம்.நௌபர், எம்.பீ.எம்.ஜௌபர் மற்றும் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். கமீட், சட்டத்தரணி எம்.எம்.முகம்மட் ராசிக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில், கழக சீருடை, கழக சின்னம் ஆகியவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதோடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியும் கௌரவிக்கப்பட்டார். அத்தோடு கழக ஆலோசகர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.