விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சவச்சாலையில்

பாறுக் ஷிஹான்-
கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார
வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை(3) மாலை குளம் ஒன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள்
அகப்பட்டு குறித்த மாணவன் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் அதே கிராமத்தைச்
சேர்ந்த பாடசாலை மாணவனான மோ.ஜதுர்சன்(வயது. 10) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஐந்து வகுப்பில் கல்வி பயின்று வந்ததுடன் எதிர்வரும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்கு தயாராகவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து சம்பவம் தொடர்பான விசாரணையினை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இம் மாணவனின்
சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -