தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரனுக்கு அடுக்குப் பாதுகாப்பு வழங்கியமைக்கான உள்நோக்கம் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் நிமல் லன்ஸா இதனைக் கூறினார்.
அத்துடன் கூட்டமைப்பினருக்கு எவ்வளவு உதவிகளை அரசாங்கம் வழங்கினாலும், சம்பந்தனும், சுமந்திரனும் மற்றும் அவர்கள் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒருபோதும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டமைப்பினர் இனவாத சிந்தனையை விதைத்தே தேர்தல் காலத்தில் வாக்குகேட்பதாகக் குறிப்பிட்ட நிமல் லன்ஸா, அந்தக் கட்சியை இல்லாது செய்வதே சிறந்தது என்றும் கூறினார்.