மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய தேசமான்ய மங்கள செனரத் செங்கலடி புல்லுமலை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடபட்டார்.
இதன்போது புல்லுமலை விகாராதிபதி அம்பிட்டிய ஞானனந்த தேரரை சந்தித்து ஆசி பெற்றதுடன், கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், தனக்கு ஆதரவு வழங்கும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்தோடு புல்லுமலை பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய தேவைகள், அபிவிருத்திகள், எதிர்நோக்கும் சவால்கள் பற்றி கலந்துரையாடினார்.
இங்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் தங்கள் பிரச்சனைகளை நிறைவேற்றி தருவதாக மக்களின் மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய தேசமான்ய மங்கள செனரத் வாக்குறுதி வழங்கினார்.