கருணா அம்மான் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.


ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் எச்.எம்.எம். ஹரீஸ் 

பி.எம்.எம்.ஏ.காதர்-

ரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் என்னை தோற்கடித்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.
அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் இவர் கடந்த சனிக்கிழமை(11-07-2020) வசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் அவர் தனது கருத்தில் தெரிவித்ததாவது

தேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் கருணா அம்மான் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.அவரது பிரச்சாரத்தில் அண்மையில் முஸ்லீம்களை வந்தேறு குடிகள் என விழித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.ஆனால் கருணா தான் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வந்தேறி குடியாவார்.46 வீதம் வாழும் முஸ்லிம் மக்களின் அடையாளம் எமது அம்பாறை மாவட்டமாகும்.

எனவே பல்வேறு கொலைகளை செய்த இவர் போன்றவர்கள் தான் நேரடியான கொலைகளை செய்தது மாத்திரமன்றி வரலாற்று கொலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். பல இடங்களில் முஸ்லீம்களை இவர் தலைமையிலான புலிகளே கடந்த காலங்களில் கொன்றிருந்தார்கள்.காத்தான்குடி கல்முனை அக்கரைப்பற்று பொத்துவில் மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லீம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
கருணா அம்மானின் தேர்தல் வியூகம் என்பது கல்முனை தொகுதியில் என்னை தோற்கடித்து கல்முனை நகரத்தை கைப்பற்றலாம் என பகல் கனவு காண்கின்றார்.ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவர் என்ற ரீதியில் என்னுடன் சகல பிரதேச மக்களுக்கும் கல்முனை நகர் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த பகுதியின் கல்முனை தொகுதி பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என இணைந்துள்ளனர்.எனவே கோடிஸ்வரன் கருணா அம்மான் வியாளேந்திரன் ஆகியோர் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.
அத்துடன் கருணா என்பவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.கடந்த காலங்களில் சஹ்ரானின் தாக்குதலை பயன்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் வியாழேந்திரன் உட்பட ஞானசார தேரர் போன்றோர் கல்முனை தரமுயர்த்தல் தொடர்பிலான உண்ணாவிரதம் இருந்த காலத்தில் அதனை தோற்கடிக்க முயற்சி செய்தனர்.ஆனால் மக்களின் ஆதரவுடன் அதை முறியடித்து வெற்றி கண்டோம். கருணா கோடீஸ்வரன் போன்றோர் கல்முனை பிரச்சினையை முன் வைத்து அம்பாறையில் வெல்ல முடியாது . முஸ்லிம் சமூகம் வெல்ல வேண்டும் என்றால் அம்பாறையை நாம். வெல்ல வேண்டும் .

இன்று கல்முனையை போன்று பொத்துவில் மக்களும் அழுதுகொண்டிருக்கிறார்கள். புதிய அரசாங்கமும் அதன் தலைமைகள் வெல்ல வேண்டும் என தற்போது அடக்குமுறை கையாள்கின்றது. அதே போன்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்பவர் அம்பாறை மாவட்டத்தை தற்போது கைவிட்டு விட்டார் .அவர் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பேசி வருகிறார்.என்னை தோற்கடிப்பதற்காக மூன்று வேட்பாளர்களை எனது தொகுதியில் களமிறங்கியுள்ளார் .இவ்வாறு இருந்த போதிலும் சனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தற்போது சஜீத் பிரேமதாசவிடம் தன்னை சந்திக்க வரும்போது ரிஷாட் பதியுதீன்னை அழைத்து வர வேண்டாம் என்று கூறுகின்றார்.

மேலும் இவரின் அமைச்சர் பதவியை கடந்த காலங்களில் பறிக்க வேண்டும் துறக்க வேண்டும் என பௌத்த துறவிகள் உண்ணாவிரதம் இருந்த போது நாங்களும் பதவியை துறந்து பக்கபலமாக இருந்தோம் இதனை மறந்து இன்று கருணாவுடன் இணைந்து கல்முனையை பறிகொடுத்த துணிந்து செயற்பட்டு வருகின்றார் என குற்றஞ்சாட்டினார்.



--



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -