இன்று முதல் வாக்காளர் அட்டை விநியோகம்!



ஜே.எப்.காமிலா பேகம்-
2020 பொதுத்தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றும் நாளையும் மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களுக்கு உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளர்.

மாவட்ட செயலகங்கள் ஊடாக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் வாக்களர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள், அருகில் உள்ள தபாலகங்களில் தங்களுக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன்.

இதனிடையே பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 14 , 15 , 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

அரச பணியாளர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நாட்களில் வாக்களிப்பில் பங்கேற்க முடியாத அரச பணியாளர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆகிய வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -