அரசாங்கம் கொறோனா சம்பந்தமான விடயத்தை வெளிப்படையாக மக்களுக்கு சொல்லவேண்டும். மீண்டும் இலங்கையில் கொறோனா அபாயம் தோன்றியுள்ள நிலை பற்றி அரசாங்கம் மறைக்க எத்தனிக்கூடாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேற்பாளர் மொஹிதீன் முஸம்மில் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம்(12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
சிறைச்சாலைகள், புனர்வாழ்வு மையங்களில் மற்றும் செறிந்து வாழும் இடங்களில் கொறோனா கொவிட் 19 மிகவும் தீவிரமாக தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எந்த முன் ஏற்பாடும் செய்யாது அது பற்றி விழிப்புணர்வு வழங்காது இருப்பது ஏன்? இது இந்த நாட்டு மக்களுக்கு செய்யும் ஒரு துரோகம் இழைக்கும் செயலாகவே கருதவேண்டும்.
என்னைப்பொறுத்த மட்டில் அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காக மக்களிடம் இதை மூடி மறைத்து தமது வெற்றியை நிர்ணயிக்கும் திட்டத்தில் இருக்கின்றனர் என்பதே தெரிகிறது. இது சம்ப்நதமாக சுகாதார திணைக்களம் மௌனம் காட்டுவது ஏன்? இதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் எடுத்திருக்கும் செயல் திட்டம் என்ன? இது பற்றி உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்துவது இவ்விருவரின் கடமையாகும் என்றார்.