பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மொஹமூத் குர்ஸீட்டிற்கும் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா சந்தேகத்தில் அவர் கடந்த நாட்களாக இல்லத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், தற்சமயம் அவருக்கு இந்த வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 57683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்காவில் இதுவரை 28 இலட்சத்து 90588 பேருக்கு இந்த வைரஸ் ஏற்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 32000 பேர் மரணித்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 மில்லியனை தாண்டியுள்ளது.