பெற்றோர் சிந்தித்து வாக்களித்தால் மாணவர்களின் எதிர்காலத்துக்கான உறுதிமொழியை நான் வழங்குகிறேன்.

கலாநிதி வி.ஜனகன்-

டந்த 18 வருடங்களாக தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பொதுமக்களுடன் நல்லுறவை

பேணி வருவதன் காரணமாக எனது அரசியல் பயணம் மிகவும் சுலபமான ஒன்றாக அமையும்

என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் தலைவர் மனோ கணேசனுடன்

இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு

உரையாற்றிய அவர், பல வருடங்களாக பல்லின மக்களுடன் அன்றாட பணிகளை

மேற்கொள்வதுடன், அவர்களின் தேவைப்பாடுகளை அறிந்து செயற்படுவதன் ஊடாக நான்

பெற்றுக் கொண்ட அனுபவங்களை எதிர்கால பாராளுமன்ற பயணத்தில் பயன்படுத்திக்

கொள்வேன் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தொழில் துறையையும், அரசியல் பயணத்தையும் நான் வேறுபடுத்திப்

பார்க்கப்போவதில்லை.

எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை நோக்காக கொண்டு பெற்றோர் சிந்தித்து வாக்களித்தால்

கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக அவர்களுக்கு முழுமையான பிரதிபலனை பெற்றுக்

கொடுப்பதற்காக நான் சேவையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

தேர்தல் காலத்தில் பல மக்கள் பிரதிநிதிகள் பலவிதமான உறுதிமொழிகளை வழங்கினாலும்

நான் மாணவர்களின் கல்வி மற்றும் இளைஞர், யுவதிகளின் தொழில்ரீதியான முன்னேற்றத்திற்கு

உத்தரவாதம் அளிக்கிறேன்.

எனவே, பெற்றோரும், ஏனைய வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று அனைத்து

தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தொலைபேசி சின்னத்தை தெரிவு செய்து உங்கள்

மனதில் நிற்கும் இலக்கங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இலங்கையான்னது தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பல்லின மக்கள் சமூகம்
வாழ்கின்ற நாடு.

ஆனால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மொட்டு அணியினர் ஒரு இனத்தவர் மாத்திரம்

வாக்களித்தால் போதுமானது என்று கூறுகின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே

இலங்கையை சரியாக அடையாளம் கண்டிருக்கிறார்.

இலங்கையை அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து

மதத்தவர்களையும், இனத்தவர்களையும் ஒற்றுமைப்படுத்தி சகல வேலைத்திட்டங்களையும்

தலைவர் சஜித் பிரேமதாசவும், தலைவர் மனோ கணேசனும் சிந்தித்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

எனவே, தலைவர் சஜித் பிரேமதாசவின் கரங்களை தேசிய ரீதியாக பலப்படுத்தும் பட்சத்தில எமது

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், இலங்கை மக்கள் தற்போதும் பேரம் பேசும் நிலைக்கு வந்துள்ளார்கள்.

வேட்பாளர் ஒருவரிடம் இருந்து தங்களுக்கான உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் அந்த

வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்ற நிலைப்பாட்டில் சில மக்கள் இருக்கின்றார்கள்.

மக்களின் பக்கம் இருந்து நோக்கும் போது அந்த கொள்கை நியாயமாகவே இருக்கின்றது.

விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே வேட்பாளர் முன்னின்று உழைக்கின்றார்கள்.

அதற்காக அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு கோருகிறார்கள்.

ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவர்களின் தொலைபேசி இலக்கம் இயங்காது அல்லது

இலக்கத்தை மாற்றி விடுவார்கள்.

தேர்தல் பிரச்சார காலத்தில் பிரம்மாண்டமாக காரியாலயங்களை அமைப்பார்கள். ஆனால்

தேர்தல் நிறைவடைவதற்கு முன்னதாகவே அந்த காரியாலயங்கள் மூடப்பட்டு விடும்.

சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதியுடன் கதைக்க வேண்டும் என்றால் அவரை தொடர்பு கொள்ள முடியாது.

அவரின் இணைப்பாளர்கள் மாத்திரமே செய்வதறியாது களத்தில் இருப்பார்கள். எனவே மக்கள்

இந்த விடயத்தில் விரக்தியடைந்து இருக்கிறார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் யானைக்கு கொரோனா வந்துவிட்டது. ஆகவே, அங்கிருந்து தொலைபேசி சின்னத்தின் வாயிலாக தலைவர் சஜித் பிரேமதாச உட்பட தலைவர் மனோ கணேசனும், நானும் மக்களின் குறைகளை தீர்க்க களத்திற்கு வந்துள்ளோம்.

பொதுமக்களிடம் வேட்பாளர்கள் குறித்து இருக்கின்ற நிலைப்பாட்டை மாற்றுவதற்காகவே நான்

இங்கு வந்திருக்கின்றேன்.

வெறுமனே வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி மக்களின் விருப்பு வாக்குகளை பெறுவது எனது

நோக்கமல்ல.
எமது சமுதாயத்தின் நாளைய தலைவர்களாக வரக் கூடிய மாணவர்களுக்கும், இளைஞர்

சமூதாயத்திற்கும் சிறந்த கல்வியையும், தொழில் வாய்ப்புகளையும் வழங்குவதற்கு எனக்கு

ஆளுமை இருக்கின்றது.

அதைவிடவும் நான் செய்து காட்டியிருக்கின்றேன். அதற்கான நான் எந்த அரசியல் கட்சி தலைவர்களிடமும் அனுமதிகளை கோர வேண்டிய அவசியம் இல்லை.

எமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க நாங்களே முன்நின்று முயற்சிக்க வேண்டும் என்ற

அடிப்படையில் நானே அதற்கான உறுதிமொழியை உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றும் கலாநிதி வி.ஜனகன் மக்கள் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -