பொய்க்குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்ட ஜாரிஸ் பிணையில் விடுதலை.
நிந்தவூர் அரசடி வட்டார பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.ஜாரிஸ் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
அட்டப்பள்ள பிரதேசத்தில் இருகுழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதலைக்காரணமாகக் காட்டி எவ்விதமான சம்பந்தமும் இல்லாத கே.எம்.எம் ஜாரிஸ் அவர்கள் மீது சில அரசியல்வாதிகள் பொய்யாகக் குற்றம் சுமத்தி இருப்பதானது இவர் மீதான காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறில்லை எனலாம்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் தீவிர ஆதரவாளரான கே.எம்.எம்.ஜாரிஸ் அவர்களை இடர்படுத்துவதன் மூலம் பைசால் காசிம் அவர்களுக்கான மக்கள் பேரலையை தடுத்துவிடமுடியும் என்பது உள்ளங்கையால் சூரியனை மறைப்பது போலவாகும்.
ஏற்கனவே பணத்தைக்கொண்டு வாக்குகளை பொருக்கித் திரியலாம் என நினைத்தவர்களால் ஜாரிஸை விலைக்கு வாங்க முடியவில்லை. இந்த ஆதங்கமும், ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையில் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்ததின் விளைவுமே ஜாரிஸ் அவர்களை கைது செய்ய அவர்களை தூண்டி இருக்கிறது.
ஊரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் நோக்கத்தில் சில அரசியல் கும்பல்கள் காட்டும் பூச்சாண்டிளுக்கும், சில்லறை களுக்கும் தான் அஞ்சப்போவதில்லை என ஜாரிஸ் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின் தெரிவித்தார்.