இறப்பர் தோட்டத் தொழிலாளியின் மகனும் பாராளுமன்றம் செல்ல வேண்டும்




திலகராஜ் -
டந்த பாராளமன்றத் தேர்தலில் நுவரஎலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்ற தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகனான என்னைப்போல இரத்தினபுரி யில் இருந்து புறப்பட்டு இருக்கும் இறப்பர் தோட்டத் தொழிலாளியின் மகன் இந்த முறை பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதே எனது அவா என தமிழ் முற்போக்கு கூட்டணியின்

தேசிய பட்டியல் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்ற காலத்தில் சிறப்பாக செயற்பட்டமைக்காக நுவரெலிய மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக விருதுபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தனபுரி கிளை சார்பில் பொன்னாடை இட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வேட்பாளர் சந்திரகுமார் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரத்தனபுரி பிரதேச சபை உறுப்பினர் மோகன், பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய வேட்பாளர் சந்திரகுமார்,

அண்ணன் திலகராஜ் எங்களுக்கு சிறந்த வழிகாட்டி . மலையகத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று பட்டம் பெற்று பாராளுமன்றம் சென்று சாதிக்க முடியும் என்பதை அவரது முதலாவது பாராளுமன்ற பிரதேசத்திலேயே நிரூபித்து காட்டி இருக்கிறார். கடந்த ஐந்தாண்டு கால அவரது செயற்பாட்டின் அடிப்படையில் 225 பேரில் 29 வது இடத்திலும் நுவரஎலியா மாவட்டத்திலும் முதலாவது இடத்தையும் பிடித்து விருதினையும் வென்றுள்ளார். 

அவருக்கு இரத்தினபுரி மாவட்ட மக்கள் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி கிளை பாராட்டி கௌரவம் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. 

அவரது பெயர் அந்த முறை தேசிய பட்டியலுக்கு பிர்ரிகலகப்பட்டு இருந்தாலும்கூட இரத்தினபுரி மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அவர் களமிறங்கி இருப்பது எங்களுக்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. அதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -