நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இற்றைவரை 55 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 13,14 மற்றும் இன்றைய (15)தினத்தில் இடம்பெற்ற அஞ்சல் வாக்கு பதிவிடும் நடவடிக்கை உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களின் மேற்பார்வையின் கீழ் சுமூகமாக நடைபெற்றதாகவும் நாளை மற்றும் நாளை மறுதினம் (16,17) முப்படை,பொலிஸ் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகத்தை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்கு பதிவு இடம்பெறவுள்ளதுடன் அதற்குரிய ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.