முஸ்லீம் காங்கிரஸ் தனது தொடர்ச்சியான அரசியல் பயணத்தில் எம் சமூகத்துக்கு தேவையான அபிவிருத்திகளையும் , உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதில் மிகப்பெரும் புரட்சியை ஏற்றபடுத்தி தமது மக்களுக்கான சேவைகளை செய்வதில் ஒரு தாய்க்கட்சியாக இருந்து வருவதை கடந்த காலங்களில் அதன் செயற்பாடுகளில் இருந்து எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த ஆட்சியின் போது , தமக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தின் மூலம் முன்னெப்போதுமில்லாதவாறு தமது ஆளுகைக்குட்பட்ட மக்களுக்கு இனம் ,மதம், மொழி பாராது தமது உச்ச அபிவிருத்தி புரட்சியை முன்னெடுத்ததில் , ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொருளாளரும் , முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் அவர்களுக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது.
சுகாதார துறையில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட எமது மக்களுக்கு , குறிப்பாக நகர்ப்புறங்களில் மட்டுமே பெறப்படக்கூடிய சுகாதார உச்ச சேவைகளை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கப்பெறச்செய்வதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காஸிமின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் அளப்பெரியது , மறக்கமுடியாதது.
தூர இடங்களுக்கு சென்று, பல நாட்கள் அலைந்து , பெரும் பணத்தை செலவு செய்து தமக்கான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் மக்களின் மீது தமக்கிருந்த அன்பினாலும் , அவர்கள் மீதிருந்த பற்றினாலும், பல கிராமங்கள் தோறும் அவர்களின் காலடிக்கே சகல சுகாதார சேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அவர் செய்தது ஒரு சுகாதார புரட்சியே அன்றி வேறொன்றுமில்லை.
இந்த சுகாதார அபிவிருத்தி புரட்சியின் சாட்சிகளாக நாட்டின் பல பகுதிகளிலும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரின் சேவைகளையும் அவற்றுக்கான ஒதுக்கீடுகளையும் உற்று நோக்கும்போது எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் 2019 வரையான 48 மாதங்களில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்களினால் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை இங்கு எம்மால் சாட்சி பகிர முடியும் .
1. பொத்துவில் மண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 829 மில்லியன்
2. வரிப்பத்தான் சேனை மண்ணுக்காகவும் , அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 24 மில்லியன்
3.மண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி இறக்காமம் - 75 மில்லியன்
4.மண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி பாலமுனை - 37 மில்லியன்
5. ஒலுவில் மண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி- 24 மில்லியன்
6. சாய்ந்தமருதுமண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 21 மில்லியன்
7. சம்மாந்துறைமண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 973 மில்லியன்
8. மாவடிப்பள்ளிமண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 38 மில்லியன்
9. நாவிதன்வெளிமண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 50 மில்லியன்
10. நிந்தவூருக்குமண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 643 மில்லியன்
11. அட்டாளைச்சேனைமண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 141 மில்லியன்
12. கல்முனைமண்ணுக்காகவும், அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 977 மில்லியன்
13. இதைத் தாண்டி பாரபட்சமற்ற தன் சேவைக்கொரு சிறு சான்றாய் தெஹிய்யத்த கண்டிய பிரதேசத்துக்கும் அம்மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி - 158 மில்லியன்களுமாகும்.
மொத்தமாக திகாமடுல்லைக்கு மட்டும் 399 கோடி (3990 மில்லியன் ) பெறுமதியான சுகாதார , உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல் தேசிய ரீதியில் பல ஊர்களுக்கு இன்னும் பல கோடி ரூபாய் பெறுமதியான சேவைகளை செய்திருக்கிறார் என்பது இன்றைய காலகட்டத்தில் எமது முன்னாள் சுகாதார இராஜங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லென்றால் அது மிகையாகாது.
மத்திய அரசிலிருந்துகொண்டு எம்மக்களுக்கான நிதிகளை பெற்றுக்கொண்டு வருவதில் காணப்படும் நீண்ட இழுபறிகளும் , தாமதங்களை எல்லாம் தாண்டி வெறும் நான்கரை வருடங்களுக்குள் இப்பெரும் அபிவிருத்தி புரட்சியை முன்னெடுத்தது என்பது முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களின் ஆளுமையினையும், ஒரு அமைச்சை திறம்பட நாடாத்திய அனுபவத்தையும் பறைசாற்றி நிற்கின்றது .
இவ்வாறான ஒரு நிலையில் மக்கள் மன்றில், நாம் அதிகாரத்தை கைப்பற்றினால் சேவைகளை செய்வோம் என்ற கோஷங்களுடனும் , மாற்றத்தை உருவாக்குவோம் என்ற வெற்று கோட்பாடுகளுடனும் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி வாக்கு கேட்பவர்களுக்கு மத்தியில்,
தான் செய்த அளப்பெரிய சேவைகளையும் , சுகாதார சேவையில் செய்த புரட்சியை முன்னிறுத்தி , இம்மக்களுக்காகவும் , இம்மண்ணுக்காகவும் தன்னால் தொடர்ச்சியான சேவைகளை செய்ய முடியும் என்ற உறுதியான கோஷத்துடன் இப்பாராளுமன்ற தேர்தலை முகங்கொடுக்க களமிறங்கியிருக்கும் எமது மாவட்டத்தின் சேவை நாயகனை வெற்றிபெறச்செய்வது என்பது நமக்காக எமது மகன் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனல்லவா.
சேவைகளின் நாயகனை வெற்றிபெறச்செய்வதன் மூலம் எமக்கான நிலையான , நின்று நிலைக்கக்கூடிய அபிவிருத்தி மட்டுமல்ல இம்மாவட்டத்தை வெற்றி கொள்வதன் மூலம், தென்கிழக்கானது எப்போதும் முஸ்லிம்களின் அரசியல் இதயம் என்பதை பறைசாட்ட நாம் ஒன்றுபடுவோம். எமக்கான மாவட்டம் எம்மவர்களால் வெற்றிகொள்ளப்பட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் தொலைபேசிச் சின்னம் இலக்கம் 7 ற்கும் வாக்களிப்போம்.