அவர்களை ஆதரித்து வட்டாரக்கூட்டம் இடம்பெற்றிருந்தது. பெரும்
சனத்திரளுடன் ஆரம்பமாகிய இக்கூட்டமானது இறுதிவரை மேலும் கூட்டம் சேர்ந்த வண்ணம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது.
குறித்த இக்கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை
உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ்வாறு கூட்டத்தில் கௌரவ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஏ. எல். தவம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போது.
"அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு முகப்பு, அம்புலன்ஸ், சிறுநீரக
சுத்திகரீப்பு பிரிவினை பெற்று தந்ததோடு இன்னும் பல சேவைகளை செய்து
இருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் கூட
அமைச்சு பதவிக்குரிய வேலையை செய்வதற்கு பைசால் காசிம் அவர்களை தவிர வேறு யாரும் இருந்திருக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இக்கூட்டத்தில் நமது பாரபட்சமற்ற பிரதிநிதி பைசால் காசிம் அவர்கள் உரையாற்றும் போது "குறித்த கூட்டத்தினைப் பார்க்கிற போது நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளை விட நிந்தவூர் மக்கள் அதிக வாக்குகளை அளிக்கத் தயாராகி இருப்பதை தான் உணர்வதாகவும், தன்னைத் தோற்கடிப்பதை மட்டுமே நோக்காகக் கொண்டு களமிறங்கி இருக்கும் வேட்பாளர்களுக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருப்பதாகவும்" தெரிவித்திருந்தார்.