அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் 100,000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான பிரதேச மட்ட ஆரம்பக் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு எஸ் பார்த்திபன் அவர்களும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு தி.மோகனகுமார் அவர்களும், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு த.சிவநேசன் அவர்களும் மற்றும் காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட திணைக்களத்தின் தலைவர்களும் பங்குபற்றினார்கள்.
இதன் போது பயிற்சி வழங்குவதற்கான இடங்கள், பயிற்சி வழங்குவதற்கான வளவாளர்கள், தொழிலின் போது பயிற்சி போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால் கலந்துரையாடப்பட்டது