மூதூர் டயரி (Mutur Diary) என்ற முகநூல் பக்கத்தினூடாக மூதூரின் பழமை வாய்ந்த புராதன புகைப்படங்களை ஒன்று திரட்டும் முயற்சியில் மூதூரின் 7 பேர்கள் கொண்ட இளைஞர் குழு ஒன்று களமிறங்கியுள்ளது.
அந்தவகையில் மூதூரின் புராதன கட்டிடங்கள், வீதிகள், மரங்கள், வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் உள்ளடங்கிய வகையிலான புகைப்படங்கள்,இன்னும் பல விடயங்களோடு,மூதூரின் சாதனையாளர்கள்,மூதூரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரைபடங்கள்.என அனைத்துவிதமான புகைப்படங்களும் உள்வாங்கப்பபடும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இதற்காக பிரத்தியேகமான போட்டி ஒன்றையும் குறித்த குழு நடாத்துகின்றது.
இதில் புகைப்படத்தின் பழமையினைப் பொறுத்தே புகைப்படங்கள் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் மூதூர் டயரியின் ஒருங்கிணைப்புக் குழு மேலும் அறிவித்துள்ளது.
