அதிகமானவிலையில் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமானவிலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டுவியாபாரிகளுக்கு எதிராக இன்று திங்கள்கிழமை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிழக்குமாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமானஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பகுதிகளில் அரசாங்கத்தின்கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகள்விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் நுகர்வோர் அதிகார சபையிக்கு கிடைக்கப்பப் பெற்றமுறைப்பாட்டிற்கு அமைவாக நடைபெற்ற விசாரணைகளின் போதே எட்டு வியாபாரிகளுக்கு எதிராகவாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின்உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத்தெரிவித்தார்.

தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி ஒரு கிலோ 500.00 க்கு விற்கப்படவேண்டும் என்று நிர்ணய விலை உள்ள நிலையில் குறித்த வர்த்தகர்கள் 650.00 க்கு விற்பனைசெய்ததாகவும் இதனை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளை கடமையை செய்வதற்கு இடைஞ்சலாக வார்த்தைப்பிரயோகங்கள் செய்ததாகவும் இவ்வாறு கூடிய விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராகவாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும்வழக்ககு எதிர்வரும் 25.06.2020 வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருட்கள் கொள்வனவில் தெளிவாக இருக்கவேண்டும் என்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் எனதுதொலைபேசி இலக்கமான 077011096 என்ற இலக்கத்துடன்தொடர்பு கொள்ளுமாறும் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -