கிண்ணியா பொலிஸ் பிரிவில், இரு வெவ்வேறு இடங்களில் கேரள கஞ்சா வைத்திருந்த இளம் குடும்பஸ்தர்கள் இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரித்தனர்,
கிண்ணியா , சூரங்கல் சந்தியில் வைத்து கேரள கஞ்சா வைத்திருந்த ( வயது -22) குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவரிடமிருந்து 05 கிராம் கேரள கஞ்சாவும்,
கிண்ணியா நடு ஊற்றுச் சந்தியில் வைத்து கேரள கஞ்சா வைத்திருந்த (வயது- 26) குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 05 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இச் சந்தேக நபர்கள் இருவரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ப்பட்டுள்ளது.