கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும், ஐ.டி.எம் நிறுவனத்தின் தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான கலாநிதி வி.ஜனகன் அவர்களின் ஏற்பாட்டில் மொரட்டுவை கொரலவெல்ல பகுதியில் வசிக்கும் பல்வேறு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அங்குள்ள பல மாணவர்களின் கல்விக் கனவை பூர்த்தி செய்யும் வகையில் புலமைப் பரிசில்கள் பெற்றோர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த புலமைப்பரிசில் திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டதுடன், நாடளாவிய ரீதியாக ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.