முஸ்லிம் தலைமைத்துவங்கள் பொய்களைக் கூறி ஜனாதிபதியையும் முஸ்லிம்களையும் தூரமக்கியுள்ளனர்


ஐ.ஏ. காதிர் கான்-
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்று, முஸ்லிம் தலைமைகளால் பிரச்சாரம் செய்யப்பட்டது. அத்துடன், ஜனதிபதியாக பதவியேற்ற பின் அவர் பற்றிய தவறான அபிப்பிராயங்கள், பொய்யான விடையங்களைப் பரப்பி, முஸ்லிம்களிடமிருந்து அவரைத் தூரமாக்கி வைத்துள்ளார்கள். இதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது என்று, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்; தெரிவித்தார். அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை அலுவலகக் கேட்போர் கூடத்தில் (19) இடம்பெற்ற உலமாக்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கண்டி மாவட்ட கிளைத் தலைவர் மௌலவி எச். உமர்தீன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அவர் மேலும் குறிப்பிடும்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியல் முஸ்லிம்களுக்கு எவ்வித அநீதிகளும் இழைக்கப்படவில்லை. அவர் சிறுபான்மை மக்கள் சார்பாகவே பல முடிவுகளை எடுக்கின்றார்;. இந்நிலையில், முஸ்லிம்; சமூகமும் தமது அரசியல் சார்ந்த கடமைகளை உணர்ந்தவர்களாக, எதிர்காலப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதன் மூலமே, முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறமுடியும். ஜனாதிபதி முஸ்லிம் மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை நல்லிணக்கப் பாதையில் வழி நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளார். அதனடிப்படையிலேயே, எதிர்வரும் பொதுத்தேர்தலில்; பொதுஜன பெரமுனவின் ஓரே ஓரு முஸ்லிம் வேட்பாளராக நான்; கண்டி மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளேன். இத்தேர்தலில் என்னை வெற்றிபெறச் செய்வதன் மூலம் கண்டி மாவட்ட முஸ்லிம்கள், அவர்களது தேவைகளை என் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். நான் உங்களில் ஒருவனாகவே இத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளேன். உங்களது பிரச்சினைகள்;, சந்தேகங்கள் எதுவாக இருப்பினும், என்னிடம் நீங்கள் தயக்கமின்றி முன்வைக்கலாம். எதிர்கால சந்ததியினரின் சுதந்திரம், உரிமைகளை முறையாக நாமாகவே பெற்றுக்கொள்ளவேண்டும். மிக நீண்ட காலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும்; நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றேன். இதனால், எனக்கு எதனையும் இவர்களிடம் உரிமையுடன்; கேட்க முடியும். நீங்கள் ஆதரவு தந்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்;.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -