கல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு


பாறுக் ஷிஹான்-
ருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் அதிகமான குதிரைகள் காணப்படுகின்றது. குறித்த குதிரைகள் அப்பகுதியில் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிப்பதோடு அதி வேகமாக ஓடுகின்றது.

குறித்த குதிரைகள் வீதிகளில் நடமாடுவதனால் பாதசாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது.

சுமார் சிறியது முதல் பெரிய குதிரைகள் வரை காணப்படுவதுடன் வீதியில் செல்லும் மக்களை சீண்டவும் முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -