மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்



தலவாக்கலை பி.கேதீஸ்-
லையக மக்கள் முன்னணியிலிருந்து அனுஷா சந்திரசேகரனை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் மத்திய குழு ஏகமானதாகவே தீர்மானித்தது எதிர்வரும் பொதுத்தேர்தலில் இவர் சுயேட்சையாக போட்டியிடுவதனாலேயே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாரென முன்னாள் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

ஒருவரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கிவிட முடியாது. மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்.

 ஒரு கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு இன்னொரு கட்சியில் தேர்தலில் போட்டியிடுவது கட்சியின் கொள்கையை மீறும் செயல். 

எனவே இவர் கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டமைக்கு விளக்கம் கோரி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூடி கட்சியின் தலைமை கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியது. 

அனுஷா சந்திரசேகரனை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கவில்லை. இவர் கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டமையால் தற்காலிகமாகவே கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 இதனால் மலையக மக்கள் முன்னணியில் ஏற்ப்பட்ட பிரதி செயலாளர் நாயகம் பதவி வெற்றிடத்திற்கு கட்சியின் மத்திய குழுவினால் மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் நாயகமாக பேராசிரியரும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -