ஐ.ஏ. காதிர் கான் -
தமது சலுகைகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு முஸ்லிம் பெண்களும்;, எதிர்வரும் பொதுத் தேர்தலில்; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த முன்வர வேண்டும் .
என்று, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.
உடுநுவர தொகுதி பெண்களுக்கான விஷேட கலந்துரையாடல், கண்டி கட்டுகஸ்தொட்டை வீதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன பிரதான தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற போது, இங்கு கருத்துரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்;பிட்டதாவது,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிகச்சிறந்த தலைவர்.
இந்த நாட்டை சிங்கப்பூர் போன்று மாற்றியமைக்க உறுதி பூண்டுள்ளார். புதியதொரு அரசியல் கலாசாரத்தையும் உருவாக்கியுள்ளார்.
இந்த நாட்டில் எந்தவொரு வருமானம் குறைந்த குடும்பங்களும் இருக்கக் கூடாது என்பதே ஜனாதிபதியின் பிரதான நோக்கமாகும்.
இந்நாட்டில் அனைத்து மக்களும் கௌரவமாக வாழ வேண்டும், அனைவருக்கும் சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே, அவரது பிரதான குறிக்கோலும் ஆகும். இந்;நிலையில், நாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில்; ஜனாதிபதியை சக்திபெறச் செய்ய வேண்டும். அதனூடாக, பலமிக்க அரசாங்கமொன்றை அமைக்க ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
எனவேதான், ஜனாதிபதியின் வெற்றிக்கு ஜனாதிபதி தேர்தலில் சிங்களப் பெண்கள் ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் பெண்களும் ஆளும் கட்சியில் பங்காளர்களாக வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால்;, நம்மால் எதனையும் சாதித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், சக்தி மிக்க உறுதியான பாராளுமன்றத்தின் மூலம்தான் நமது நாட்டை நாம் கட்டியெழுப்பலாம்.
ஜனாதிபதி வெற்றிபெற்றாலும் அதிக அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் எங்களிடம் இல்லையென்பதால், பெரிய அளவிலான வேலைத்திட்டங்கள் அனைத்தையும், பாராளுமன்ற அதிகாரம் இல்லாமலேயே செய்கின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களில் கனிசமான பேர்கள் வாக்களிக்கவில்லை என்பதே உண்மை.
ஆனாலும், இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும், நான்தான் ஜனாதிபதி என, ஜனாதிபதி அவரது பதவியேற்பு நிகழ்வின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதியின் கரத்தைப் பலப்படுத்தி, சக்தி மிக்க பாராளுமன்றத்தை அமைக்க, கைகோர்க்க முன்வர வேண்டும் என்றார்.
