முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டுமானால் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான தேசிய காங்கிரஸிக்கு வாக்களிப்பதன் மூலமாகத்தான் தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு எதுவித சேவைகளும் செய்யாமலும் சமுகத்தினை நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பேசாமல் இருந்து விட்டு இப்போது பல பித்தலாட்ட கதைகளை மக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள். இந்த நாடகம் எமது மக்கள் மத்தியில் எடுபடாது. இவர்களுக்கு நாங்கள் இந்த தேர்தலில் சிறந்த பாடத்தினை கற்றுக் கொடுக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து வாக்களிப்பதன் மூலமை வெற்றி கொள்ளமுடியும்.
தேசிய காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று அமையப் போகின்ற ஆட்சியில் பங்காளியாக சேர்ந்து எதிர்காலத்தில் அரசாங்கத்தில் சிறந்த தீர்வு திட்டத்தினை முன்வக்கின்ற கட்சியாக திகழும்.
தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் எதிர்காலத்தில் அமையவுள்ள அமைச்சரவையில் அமைச்சராக இருக்கப் போகிறவர் எனவே அந்தவகையில் எமது மாவட்டத்தில் குறிப்பாக எமது தமிழ், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு மாவட்டத்தில் தீர்வு காணக்கூடிய கட்சியாகவும் அதன் தலைவராகவும் உள்ளார். பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கும் ஒரு வழி ஏற்படும் அதற்காகத்தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எதிர்காலத்தில் அரசியல் பங்காளி என்ற முத்திரையோடு அரசுடன் இணைந்து சமூகத்தின் மற்றும் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.
அதற்காகத்தான் இந்த தேர்தல் களத்தில் கூடுதலாக மக்களுக்கு அது தொடர்பான தெளிவூட்டல்களை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
